மன்னாரிலுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஜனாதிபதி திடீர் விஜயம்(Video)

People Mannar Fishermen Gotapaya Rajapaksa
By Ashik Feb 02, 2022 03:54 PM GMT
Report

மன்னார் - நடுக்குடா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதல் காற்றாலை மின்சக்தி பூங்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று(02)காலை 11 மணியளவில் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு தொடக்கம் நடுக்குடா வரை நிறுவப்பட்டுள்ள பாரிய காற்றாலை காரணமாக மீன் வளம் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம்(01) மதியம் இடம்பெற்ற மன்னார் பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டத்தை நிறுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறித்த காற்றாலை பூங்காவிற்கு கோட்டாபய ராஜபக்ச விஜயம் மேற்கொண்டுள்ளார்.


கடந்த வருடம் குறித்த நடுக்குடா காற்றாலை மின் செயற்திட்டத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியாவின் தொழில் அதிபரான அதானி வருகை தந்ததுடன் இலங்கைக்கான சீன தூதுவரும் காற்றாலை மீன் செயற்திட்டத்தைப் பார்வையிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் வருகை தந்துள்ளார் கடந்த மாதம் அளவில் காற்றாலை விரிவுபடுத்தல் திட்டத்திற்கான ஆய்வு நடவடிக்கைகளுக்காக விசேட குழுவினர் எருக்கலமபிட்டி பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் மக்களின் எதிர்ப்பால் குறித்த ஆய்வு நிறுத்தப்பட்டது.

அதே நேரம் தற்போது தாழ்வுபாடு தொடக்கம் செளத்பார் கடற்கரை வரை காற்றாடிகளைப் பொருத்துவதற்கான விரிவுபடுத்தல் திட்டம் உயர் மட்ட ரீதியில் இடம் பெறுவதாகவும் நேற்றைய தினம் இடம் பெற்ற அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நிலையிலேயே அவற்றை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதியின் மன்னார் விஜயம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காற்றாலை மின்திட்டம் மற்றும் கணியமணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு தம்பபவனி காற்றாலை மின் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நாட்டை மின்சாரம் மூலம் வலுப்படுத்துதல், நிலையான மின் விநியோகத்தை வழங்குதல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டது.

அதன் அடிப்படையில் இரண்டு பெரிய பருவக்காற்று களையும் எதிர்கொள்ளும் மன்னார் தீவின் தெற்கு கடற்கரையில் 13 கி.மீ மற்றும் 150 ஹெக்டேர் பரப்பளவு தேர்ந்தெடுக்கப்பட்டது.

இவ் மின் உற்பத்தி நிலையத்தில் 90 மீ உயரமுள்ள டர்பைன் உயரம் கொண்ட 30 கோபுரங்கள் உள்ளன. சுழலும் கத்திகளின் (காற்றாலைகள்) விட்டம் நூற்று இருபத்தி ஆறு மீட்டர் மற்றும் கோபுரம் 3.45 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

இத்திட்டத்தில் நடுக்குடா கிரிட் துணை மின் நிலையம் மற்றும் புதுகாமம், மன்னார் ஆகிய இடங்களிலிருந்து 36 கி.மீ தூரத்திற்கு மின் பரிமாற்ற அமைப்பு உள்ளது. மொத்த மின் திறன் 103.5 மெகாவாட். இதனூடாக ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 08 ரூபாவிற்கும் குறைவான செலவாகும் என இலங்கை மின்சார சபை கூறுகிறது.

இந்த சுற்றுச்சூழலுக்கு உகந்த, அதிநவீன காற்றாலை, உகந்த மின்சாரம் வழங்குவதற் கான பல சிறப்புத் தொழில்நுட்பங்களுடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை நோக்கிய பயணத்தில் ஒரு மைல்கல்லாக இத்திட்டம் கருதப்படுகிறது.

“தம்பபவனி காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மேலும் 50 மெகாவாட்டை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. அதன் முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்த ஜனாதிபதி, புதிய காற்றாலைகள் அமைக்கக் கூடிய இடங்கள் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார்.

தற்போது காற்றாலை மின் நிலையங்கள் மூலம் 248 மெகா வாட் மின்சாரம் தேசிய மின் தொகுப்பில் சேர்க்கப்படுகிறது. குறுகிய காலத்தில் அதனை விளம்பரப் படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது மற்றும் மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி கண்காணிப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த மின்சார உற்பத்தியில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களிலிருந்து பெறுவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காமல் குறைந்த விலை மின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்கவும் இது நோக்கமாக உள்ளது.

குறித்த விஜயத்தில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர் லலித் வீரதுங்க, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, கே.எச்.டி.கே. சமரகோன், மின்சார சபையின் பிரதித் தலைவர் நலிந்த இளங்ககோன், பதில் பொது முகாமையாளர் ரொஹந்த அபேசேகர மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US