நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..!

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka President of Sri lanka
By Sivaa Mayuri Nov 21, 2024 03:10 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் (Sri Lanka) பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று  (21) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான ஒத்திகை நேற்று (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இன்று முற்பகல் 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு முற்பகல் 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருக்கிறது

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு 

இதன்படி, செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசிப்பார்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

முதலாவதாக சபாநாயகரின் தெரிவு இடம்பெறவிருக்கிறது. இதன்போது, அரசியலமைப்பின் 64 (1) பிரிவு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் 4,5 மற்றும் 6 இன் ஏற்பாடுகளுக்கு அமைய சபாநாயகர் ஒருவரை வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்தல், சபாநாயகரின் பதவிப்பிரமாணம் அல்லது உறுதியுரை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் அல்லது உறுதியுரை, பிரதிச் சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் வாக்களிப்பினால் தெரிவு செய்தல் என்பன இடம்பெறும்.

முதலாவது நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது என்பதால் தமக்கு விரும்பிய ஆசனங்களில் அமர முடியும்.

இந்தச் செயற்பாடுகள் முடிவடைந்ததும் நாடாளுமன்றம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 சரத்துக்களுக்கு அமைய, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய முற்பகல் 11.30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அக்கிராசனத்தில் அமர்ந்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகை

இந்தநிலையில் பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வை, எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைய, நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு அமைய ஜயமங்கள கீதம், முப்படையினரின் அணிவகுப்பு, மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனப் பவனி என்பன இடம்பெறாது என படைக்கல சேவிதர் குசான் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

இதேவேளை முற்பகல் 11.00 மணிக்கு சகல விருந்தினர்களும் தமது இருக்கைகளில் அமரவைக்கப்படவுள்ளனர்.

முற்பகல் 11.10 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் சபாநாயகர் வரவேற்கப்படவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து முற்பகல்; 11.15 மணிக்கு பிரதமர் வரவேற்கப்படவிருப்பதுடன், இதன் பின்னர் ஜனாதிபதியின் வருகை இடம்பெறும்.

முற்பகல், 11.20 மணியளவில் சபாநாயகர், நாடாளுமன்றச் செயலாளர்நாயகம் குசானி ரோஹணதீர உள்ளிட்டோர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான படிக்கட்டுகளுக்கு அருகில் வரவேற்கவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர் ,நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி, முற்பகல் 11.25 மணிவரை அங்கிருப்பார் அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு முன்செல்ல, படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் ஆகியோர் வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வார்கள்.

நாடாளுமன்றில் ஆரம்ப அமர்வை எளிமையாக நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை..! | President Opening Session In A Simple Manner

சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், அமைச்சுக்களின் செயலாளர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் குசான் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.  

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கை மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள ஆபத்து

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

தென்னிலங்கையில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US