இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்க தலைவராக தெரிவான அமைச்சர் நளிந்த
சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளருமான நளிந்த ஜெயதிஸ்ஸ, பத்தாவது நாடாளுமன்றத்திற்கான இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தொடர்புத்திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
நட்புறவு சங்கத்தின் கூட்டம், 2025 மே 08 அன்று நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட சந்தோஸ் ஜா
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குசானி ரோஹணதீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், இலங்கை - இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தேர்ந்தெடுக்கப்பட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri