மோடியின் பதவிப்பிரமாண நிகழ்வுக்கான அழைப்பை ஏற்ற மாலைத்தீவின் ஜனாதிபதி
இந்திய(India) பிரதமர் நரேந்திர மோடியின்(Narendra Modi) அழைப்பை ஏற்று மாலைத்தீவின் ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu), இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
மாலைத்தீவு குடியரசுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் முனு மஹாவர், ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது ஜனாதிபதிக்கு இந்திய பிரதமரின் அழைப்புக் கடிதத்தை வழங்கியுள்ளார். இதனையடுத்தே, அவர் நிகழ்வில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு நிகழ்வு
முன்னதாக சீன சார்பு ஜனாதிபதியான முய்சுவுக்கும் மோடிக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டிருந்த நிலையில், முய்சுவின் வருகை முன்னிலை பெறுகிறது.
இதேவேளை, நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் வெளிநாட்டு தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), பங்களாதேஷ் ஜனாதிபதி ஷேக் ஹசீனா(Sheikh Hasina), நேபாள பிரதமர் புஸ்ப கமால் டால்(Pushpa Kamal Dahal), பூட்டான் பிரதம மந்திரி ஷெரிங் டோப்கே(Tshering Tobgay) ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு(Droupadi Murmu), ஞாயிற்றுக்கிழமை இரவு 7:15 மணிக்கு, ராஸ்டிரபதி பவனின் முன்களத்தில் மோடி மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |