ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு கொழும்பில் வரவேற்பு பதாதைகள்
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகரில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம்
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam
