"அரசாங்க கொள்கைக்கு இணங்காது போனால் வெளியேறலாம்" -அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு (VIDEO)
"சேதனப்பசளைகள் பயன்படுத்துவதை மையமாகக் கொண்ட பசுமை விவசாயம் மட்டுமே நாட்டின் விவசாயக் கொள்கை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இயற்கை பசனைகளை மட்டுமே அரசாங்கம் விநியோகிப்பதாகவும், இயற்கை விவசாயத்திற்கு மாத்திரமே மானியங்களை வழங்குவதாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஜனாதியின் ஊடகப்பிாிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் விவசாயிகள் முறையாக பயிற்றப்படவேண்டும், இதை செயல்படுத்தும் போது இரசாயன பசளை மாஃபியாவை அடையாளம் காண வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரியான கொள்கையை வெற்றியடையச் செய்வதற்கு அதிகாரிகளின் அர்ப்பணிப்பு அவசியமானது என்று இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பெரும்போகத்துக்கான பயிர்ச்செய்கை மற்றும் சேதனப்பசளைகளை வழங்குதல் தொடர்பாக இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
தற்போது பெய்த கனமழையால் காய்கறி உள்ளிட்ட பல பயிர்களின் விளைச்சல் குறைந்துள்ளது.
மேலும், பசளை வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம், பெரும்போகத்தில் விளைச்சல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும், மாவட்ட அளவில், மொத்த விவசாய நிலங்களில் ஏறக்குறைய 70% நிலங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது கூறியுள்ளனர்.
இந்தநிலையில் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பயிர்ச்செய்கையை தாமதப்படுத்துவதற்கும் காரணம் அவர்கள் உாிய வகையில் தெளிவூட்டப்படாமையே என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
விவசாயிகளுக்கு துல்லியமாக பயிற்றுவிக்காத அதிகாரிகளிடம் ஜனாதிபதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பசுமை விவசாயக் கொள்கைக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குப் பதில் வழங்க அதிகாரிகள் உழைக்க வேண்டும் என வலியுறுத்திய ஜனாதிபதி, அரசாங்கக் கொள்கைக்கு உடன்படாத அதிகாரிகள் அதில் இருந்து வெளியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.






இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 10 மணி நேரம் முன்

விடுதலையான பேரறிவாளன்! மகனை கட்டிபிடித்து இனிப்பு ஊட்டி கொண்டாடிய தாய் அற்புதம்மாள் வீடியோ News Lankasri

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022