இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Indian fishermen Anura Kumara Dissanayaka Fishing Sri Lanka India
By Theepan Jan 11, 2026 05:17 PM GMT
Report

எதிர்வரும் 15 ஆம் திகதி வட மாகாணம் வருகை தரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்திய எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்றொழிலை நிறுத்துவதற்கு தீர்க்கமான நடவடிக்கை ஒன்றினை தெரிவிக்க வேண்டும் என அகில இலங்கை கடற்றொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளர் என்.பி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வட மாகாணம் குறிப்பாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் பெரும்பாலான பாதிப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

நாங்கள் பலமுறை ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதிகளுக்கும் இந்திய தூதுவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர்களுக்கும் மனுவைக் கொடுத்து களைத்து விட்டோம்.

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்:விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்து

அனைத்து புனிதர்கள் தேவாலய வெடிகுண்டு நாடகம்:விசாரணையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்து

இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள்

இந்த வாரமும் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்திய அத்துமீறிய இழுவை மடிப் படகுகள் கரையை அன்மித்த பகுதி வரை சுதந்திரமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எல்லை தாண்டும் இந்திய கடற்றொழிலாளர்கள் சிலரை மட்டும் கடற்படையினர் கைது செய்கின்ற நிலையில் அநேகமான படகுகள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | President Must End Indian Overfishing

இதன் காரணமாக எமது  கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் எமது கடல் எமக்கானதா என்ற கேள்வியும் எழுகின்றது.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் வருகை தந்துள்ளார் என நினைக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் கடற்றொழிலாளர்கள் சமூகப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.அவர் எம்மை சந்திப்பதற்கு பின் நிற்பது இந்தியாவின் அழுத்தம் ஏதும் காரணமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

வாகனப் பதிவுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதி

வாகனப் பதிவுகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள புதிய விதி

உரிய ஏற்பாடு

மேலும் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு  நிவாரணம் வழங்குமாறு தெரிவித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய வருகை! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | President Must End Indian Overfishing

ஆகவே வடக்கு வரும் ஜனாதிபதி கடற்றொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அத்தோடு, இந்தியாவின் அத்துமீறிய கடற்றொழில் தொடர்பில் எமது ஆதங்கங்களை முன்வைப்பதற்கு கடற்றொழில் சமூகத்தை சந்திப்பதற்கு  ஏற்பாடுகளை உரிய தரப்பினர்கள் செய்து தரவேண்டும்  என அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார். 

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அடுத்துவரும் 24 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US