வெடிகுண்டு தயாரித்து ஜனாதிபதியை கொலை செய்யும் வயதானவரின் திட்டம்! கேலி செய்த அநுர
தன்னைக் கொலை செய்வதற்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்துகளைச் சுரண்டி எடுத்து, அதனைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்போவதாக நபரொருவர் கருத்து வெளியிட்டுள்ளார் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம பகுதியில் நேற்றையதினம்(13.09.2026) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தற்போதைய எமது அரசாங்கம், மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றால் அதனை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தைத் திட்டுவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு.
விமர்சிக்க மக்களுக்கு உரிமை உண்டு
ஆட்சியாளர்களிடம் கேள்வி எழுப்பும் அரசியல் கலாசாரமொன்றை நாட்டில் உருவாக்க வேண்டும்.
நேற்று எனக்கு ஒரு தகவல் கிடைத்தது, ஒரு கூட்டத்தின்போது வயதான நபர் ஒருவர், ''தனக்கு இரண்டு தீப்பெட்டிகளில் உள்ள தீக்குச்சிகளின் மருந்தினை வைத்து வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்றும், அதைக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார மீது தாக்குதல் நடத்துவேன்'' என்றும் தெரிவித்திருக்கின்றார்.
பாவம், அந்த நபர். சமூகத்தில் விமர்சிப்பதற்கு இன்று கிடைத்துள்ள சுதந்திரத்தை அவர் இப்படிப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரண்டு வருட காலப் பகுதியில் எந்தவொரு மக்கள் போராட்டத்தின்போதும் நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படவில்லை.
பயன்படுத்தப்படாமல் இருந்ததால், கண்ணீர்ப்புகைக் குண்டுகளில் ஒரு தொகுதி காலாவதியாகிவிட்டதாக பொலிஸ் மா அதிபர் அண்மையில் என்னிடம் தெரிவித்திருந்தார்.
கடந்த காலங்களில் அரசியல்வாதிகளைக் கண்டு மக்கள் அச்சத்துடன் நடுங்கினர். கறுப்புப் பட்டி அணிந்த குண்டர் குழுக்களைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்திய காலம் இருந்தது.
ஆனால், அவை அனைத்தையும் இன்று நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய உறவை நாம் உருவாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகாவை இராணுவத்தினர் கைது செய்த போது அதே ஹோட்டலில் தங்கியிருந்த அநுர! மேடையில் சம்பவத்தை விபரித்த ஜனாதிபதி