சிங்கப்பூரில் அர்ஜூன் மகேந்திரனை சந்தித்தாரா ஜனாதிபதி..!
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை சிங்கப்பூரில் வைத்து சந்தித்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி ஜப்பான் விஜயம் செய்யும் வழியில் சிங்கப்பூரில் அர்ஜூன் மகேந்திரனை சந்தித்து பகல் உணவை அவருடன் எடுத்துக் கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
குற்றச்சாட்டை நிராகரித்த ஜனாதிபதி
என்ற போதும் இந்தக் குற்றச்சாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.
அத்துடன் சிங்கப்பூர் பிரதமருடன் காலை உணவை உட்கொண்டதாகவும், பகல் உணவு சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான விமானத்திலேயே எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆறு மணித்தியாலங்கள் மட்டுமே தாம் சிங்கப்பூரில் தங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
