இந்திய வெளிவிவகார அமைச்சர் ஊடாக ஜனாதிபதி கூட்டமைப்புக்கு அனுப்பிய முக்கிய செய்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கிய செய்தி ஒன்றை அனுப்பி வைத்ததாக தெரியவருகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தை நடைபெற்றதுடன் இந்த பேச்சுவார்த்தைக்காகவே ஜனாதிபதி தனது இந்த முக்கிய செய்தியை அனுப்பி வைத்துள்ளார்.
ஜனாதிபதியின் செய்தியை இந்திய வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஜனாதிபதி வழங்கிய ஐந்து வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்றுவேன் எனவும் அது குறித்து நம்பிக்கை கொள்ளுமாறு ஜனாதிபதி, இந்திய வெளிவிவகார அமைச்சரின் ஊடாக கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.