இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று குறித்த சந்திப்பானது நடைபெற்றுள்ளது.
கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு எதிரான போட்டியில் இலங்கை கால்பந்தாட்ட அணி அபார வெற்றியீட்டியது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம்
அடுத்த வருடம், நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட அணியை ஜனாதிபதி ஊக்குவித்ததுடன் கால்பந்தாட்டத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
மேலும், வீரர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் கால்பந்தாட்ட துறையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதோடு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தொழில்முறை போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களைக் கொண்டு வலுவான தேசிய அணியை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |