செயற்கை உர பயன்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கை அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, நைட்ரஜன் கழிவுகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
‘மனிதன், பூமி மற்றும் சுபீட்சத்துக்கான காலநிலைச் செயற்பாடுகளை விருத்தி செய்தல்’ என்ற தலைப்பில் இன்று இடம்பெற்ற காணொளி தொழிநுட்பத்தின் மூலம் இடம்பெற்ற அரச தலைவர்கள் கலந்துரையாடலில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சர்வதேச ரீதியிலான நிலக்கரியற்ற புதிய சக்தி வலு மாநாட்டின் இணைத் தலைவராக இருப்பதையிட்டு இலங்கை பெருமையடைகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரகடனத்தின் கீழ், சதுப்பு நிலச் சுற்றாடல் கட்டமைப்பு மற்றும் ஜீவனோபாயம் தொடர்பான செயற்பாட்டுக் குழுவுக்கும் இலங்கை தலைமை வகிக்கின்றது.
பசுமை நைட்ரஜன் முகாமைத்துவம் தொடர்பான கொழும்பு அறிக்கையின் பிரகாரம், நைட்ரஜன் வாயு வெளியீட்டின் அளவை 2030ஆம் ஆண்டாகும் போது அரைவாசியாகக் குறைப்பதற்கு இலங்கை முயற்சி எடுத்துள்ளது.
இலங்கையின் உள்நாட்டுக் கொள்கையின் வரையறை, மேலாண்மை பற்றி அவதானம் செலுத்தி உள்ளமையினை நான் உறுதிப்படுத்துகின்றேன்.
இதனை நடைமுறைப்படுத்துவதற்காக, அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அதன்மூலம் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன், நைட்ரஜன் கழிவுகளைக் குறைத்துக்கொள்ளவும் முடியும்.
இலங்கையில் காபன் அளவை 2050ஆம் ஆண்டாகும் போது பூச்சியமாக்கி கொள்ள எதிர்பார்த்துள்ளதோடு, 2030ஆம் ஆண்டாகும்போது இந்நாட்டின் சக்தி வலுத் தேவையில் 70 சதவீதத்தை மீள் பிறப்பாக்கச் சக்தி மூலங்கள் மூலம் நிறைவு செய்து கொள்ளும் இலக்கை அடைந்து கொள்வதற்காக இலங்கை பயணித்துக்கொண்டிருக்கிறது.
இந்தச் சிறப்பான நோக்கத்தை அடைந்துகொள்வதற்காக, எமது அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்காகத் தொழிநுட்பப் பரிமாற்றம், திறன் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நிதி நன்கொடை போன்ற துறைகளில் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri