முக்கியஸ்தர் ஒருவரின் பதவியை பறிக்கத் தயாராகும் கோட்டாபய?
ராகம மருத்துவ கல்லூரியில் இடம்பெற்ற சித்திரவதை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு மூன்று சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்கு வாகனங்களை வழங்கியதாக கூறப்படும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி வீரசிங்கவை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன், அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை பயன்படுத்தி ராகம மருத்துவ கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று அருந்திக பெர்னாண்டோ இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது, நிலையில் மனிதாபிமானமற்ற சித்திரவதை சம்பவம் குறித்து அமைச்சரவை குழு விசாரணை நடத்த உள்ளது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri