தமிழ் மக்களை அவமதித்துள்ளார் ஜனாதிபதி! - சுமந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

Jaffna President Tamil National Alliance M A.Sumanthiran
By Rakesh Jan 19, 2022 07:35 PM GMT
Report

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் சுய நிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், சில வசதிகளை மட்டுமே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர், அதனைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்போம்,நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்க உரையில் கூறி தமிழ் மக்களை அவமதித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எம்.ஏ.சுமந்திரன் (M A.Sumanthiran) குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இறுதியாகக் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான விவாதம் நடத்த அதிக நேரம் வேண்டும் என நாம் வாதிட்டோம்.

ஆனால், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையைக்கேட்ட பின்னர், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாம் அதிக நேரம் கேட்டு வாக்குவாதப்பட்டது வீணானது என்றே கருதுகின்றேன்.

கொள்கை என எதுவுமே இல்லாத உரை என்றே ஜனாதிபதியின் உரையைக் கூற வேண்டும். ஜனாதிபதியின் உரையில் நாட்டிலுள்ள மற்றும் மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறிய போதிலும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் என எதனையும் அவர் கூறவில்லை.

ஜனாதிபதி தனது உரையில் ஒரு சில விடயங்களைக் கூறியுள்ளார். குறிப்பாக மிக மோசமான நாணய நெருக்கடியொன்றை எதிர்கொண்டுள்ளோம்.

பொருளாதார நெருக்கடியின் உச்சத்தில் நாம் உள்ளோம், இதற்கான தீர்வுகளைக் காண கடந்தகால அரசுகள் தோல்வி கண்டுள்ளன எனக் கூறினார்.

இறுதியாக இருந்த அரசை மட்டுமல்ல அதற்கு முன்னர் இருந்த அரசுகளையும் ஜனாதிபதி குறை கூறியுள்ளார். இதற்கு முன்னர் இருந்த அரசுகளில் இரண்டு அரசுகளுக்கு மஹிந்த ராஜபக்சவே ஜனாதிபதியாகத் தலைமை தாங்கினார்.

ஆகவே, இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மஹிந்த ராஜபக்சவின் அரசும் காரணம் என்பதையும், மஹிந்த ராஜபக்ச அரசும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தோல்வி கண்டுள்ளது என்பதையுமே ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி பிரச்சினையை இனங்கண்டு அதனை மஹிந்த ராஜபக்சவின் தோளில் சுமத்தியுள்ளாரே தவிர இந்த நெருக்கடிக்குத் தீர்வு என்ன, எந்தப் பாதையில் பயணித்து இந்த நெருக்கடிகளில் இருந்து மீளப்போகின்றோம் என்ற தீர்வுகளை முன்வைக்கத் தவறியுள்ளார்.

அவரது உரையை நான் கேட்டுக்கொண்டிருந்த நேரத்தில் சில குறுஞ்செய்திகள் வெளிவந்தன. அதனைப் பார்க்கும்போது மேலும் 500 மில்லியன் டொலர்கள் எமது பிச்சைப் பாத்திரத்தில் போடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.

இதுவொரு நாளாந்தச் செயற்பாடாக மாறிவிட்டது. கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு யாரும் பிச்சையிடுவார்களா எனக் காத்துக்கொண்டிருக்க வேண்டியுள்ளது. இதுதான் இன்று எமது நிலையாக மாறியுள்ளது. அடுத்த கட்டத்தில் என்ன செய்யப்போகின்றோம் என்பது தெரியாத நிலைமை உருவாகியுள்ளது.

அதேபோல் இந்த நாடாளுமன்றத்தில் வெவ்வேறு மக்களின் பிரதிநிதிகள் வெவ்வேறு ஆணையுடன் உள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மக்களின் விடயத்தில் முற்றிலும் வேறுபட்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

நல்லிணக்கம் தொடர்பில் அரசு கவனம் செலுத்துவதாகவும், வடக்கு, கிழக்கு மக்களுக்குச் சில வசதிகளைச் செய்து கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம் என ஜனாதிபதி கூறி எமது மக்களை அவமதித்துள்ளார்.

எமது மக்கள் சுயநிர்ணயம், சுயாட்சி, அதிகாரப் பகிர்வு, ஆட்சி என்பவற்றைக் கேட்டு நிற்கின்றனர். ஆனால், வெறுமனே வசதிகளை மட்டும் எமது மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதனைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறுவதையும், நல்லிணக்கத்தை உருவாக்க இதுவே தீர்வு எனவும், தேசிய பிரச்சினைக்குத் தீர்வு இது எனவும் கூறுவதையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தமது அரசியல் சித்தாந்தத்தைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு மக்களின் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசியல் சித்தாந்தம் என்பது எமது கொள்கை. அது எமது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணை. அதனை ஓரமாக வைத்துவிட்டு உங்களின் கருத்துக்கு செவிமடுக்க நாம் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US