ரொஷான் ரணசிங்க எதனால் பதவி விலக்கப்பட்டார் : அரச தரப்பில் இருந்து வழங்கப்பட்டுள்ள விளக்கம்
விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வந்த ரொஷான் ரணசிங்க எதனால் பதவி விலக்கப்பட்டார் என்பது குறித்து அரசாங்க தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ரொஷான் பதில் அளிக்க தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி (Video)
ரொஷான் பதிலளிக்கவில்லை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருடன் இணைந்து இந்திய உயர்ஸ்தானிகரிடம் கிரிக்கெட் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஏன் கோரப்பட்டது என ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் என்ன காரணத்திற்காக சஜித்தின் காரியாலயத்திற்கு சென்றார் எனவும் அவர் வினவியுள்ளார்.
மகாவலி காணிகளை அரசியல் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதா? என ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த கேள்விகளுக்கு ரொஷான் ரணசிங்க உரிய பதில் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பினை உதாசீனம் செய்தமை, கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் ஆகிய காரணங்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , ரொஷான் ரணசிங்கவை விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |