வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு
வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(02.09.2025) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருட காலம் பூர்த்தியாவதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களின் ஆரம்ப நிகழ்வுகளை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்குக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், இன்று(02) புதுக்குடியிருப்பில் தென்னை முக்கோண வலயத்தினை ஆரம்பித்து வைப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டதுடன் நண்பகல் 1 மணியளவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
நீண்டகாலக் கோரிக்கை
மிக நீண்டகாலக் கோரிக்கையாக இருந்த வட்டுவாகல் பால நிர்வாகப் பணிகளை ஆரம்பிக்க வந்த ஜனாதிபதியை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் வரவேற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பால நிர்மாணப் பணிக்கான பெயர்ப்பலகையை ஜனாதிபதி திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தியுள்ளார்.
இதன்போது, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான இளங்குமரன், திலகநாதன், ஜெகதீஸ்வரன், ரவிகரன் மற்றும் மதகுருமார்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், தவிசாளர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
















வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
