கோட்டாபய ஜனாதிபதி பதவியை துறக்க வைக்க சூழ்ச்சி! பரபரப்பு தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அரசியல்வாதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது சற்று செயலற்ற நிலையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பதவி விலகுவார் என பசில் ராஜபக்ச கணக்கிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் அரச ஆட்சியை தனது கையில் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதா என பசில் ராஜபக்ஷ யோசனை செய்து வருகின்றார்.
அதன் பின்னர் அமெரிக்காவின் மூலோபாயத்திற்கமைய இலங்கையை வழிநடத்துவது குறித்து பசில் இன்னமும் சிந்தித்து வருகிறார்.
நாடு வங்குரோத்தடைந்து விட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அமைப்பதற்கு உருவாக்கப்பட்ட குழுக்கள் பயனற்றது. அது பைத்தியகாரதனமானது.
நாடு ஒரு போதும் மீண்ணெடழுவதற்கு வாய்ப்புகள் இல்லை. நாட்டின் வங்குரோத்து நிலைமையை பயன்படுத்தி அமெரிக்காவுக்கும் இந்தியாவிற்கும் அவசியமான முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கே பசில் ராஜபக்ஷ முயற்சித்து வருகின்றார்.
பசில் ராஜபக்ஷவை விரட்டியத்தால் மாத்திரமே நாட்டின் தற்போதைய நிலைமையை தவிர்க்க முடியும். அதனை தவிர்த்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனினும் அது நினைக்கும் அளவிற்கு இலகுவான விடயமல்ல. எனினும் இலகுவாக முடியாத விடயங்களையே நாங்கள் கைகளில் எடுக்கின்றோம்.
இந்த மாதம் இரண்டு அமெரிக்க இராஜதந்திரகள் நாட்டிற்கு வருகின்றார்கள். நாட்டில் நெருக்கடியை தீவிரப்படுத்தி மக்களை வேறு பக்கம் திசை திருப்பிவிட்டு இந்து அமெரிக்க முலோபாயத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பசில் உள்ளார். இதற்காகவே எங்களை நீக்கினார்கள்.பசில் என்பவர் அமெரிக்காவுக்காக வேலை செய்யும் ஒருவராகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
