வெடிகுண்டாக மாறும் சிலிண்டர்கள் - ஜனாதிபதி கோட்டாபய அதிரடி நடவடிக்கை
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை ஜனாதிபதி இன்று நியமித்துள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குள் விசாரணைகளை நிறைவு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளாா்.
இதேவேளை தொடர் சிலிண்டர் வெடிப்புக்களால் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவொன்று வெடிகுண்டுக்கு இணையானது என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
