பொலிஸ் மா அதிபர் பதவி குறித்து பிரதமரின் விசேட அறிவிப்பு
எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபர் ஒருவரை பெயரிடுவார் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பதவி வெற்றிடம்
அரசியல் சாசன சபையை எந்த நேரத்திலும் சபாநாயகரினால் கூட்ட முடியும் எனவும் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி விரைவில் நாட்டில் பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடம் நிரப்பப்படும் என தெரிய வருகிறது.
பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சீ.டி விக்ரமரட்ன பதவியில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டது முதல் அந்தப் பதவிக்கான வெற்றிடம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 26ஆம் திகதி சந்தன விக்கிரமரத்ன ஓய்வுபெற்றுவிட்டார். அடுத்த பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்கு இன்னும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் பொலிஸ்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியபோதும் எதுவித முன்னேற்றமும் இல்லை.
பொலிஸ்மா அதிபருக்குத் தகுதியான எவரும் சிபாரிசு செய்யப்படாமையே இதற்குக் காரணம் என்று அறியமுடிகின்றது.
மேலதிக தகவல்-ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
