அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்த திட்டம்
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவை அமைச்சர்கள், ஆளும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் அண்மையில் அழைக்கப்பட்டு அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையானது தேர்தலுக்கான முன்னரான ஆயத்தமாக இருக்கக்கூடும் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம்
மறைப் பெறுமதியில் காணப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தை பூச்சிய நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகவும், எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் இந்த நிலைமை நேர்ப் பெறுமதியை எட்டும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முன்னேற்றம் குறித்து மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துமாறு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.
எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கக் கூடிய வகையில் ஊருக்கு சென்று பின்னணியை உருவாக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri