இரண்டு வருடங்களில் வெற்றிகண்டுள்ள ரணில்
நாடு வீழ்ச்சியடைந்தபோது அதனைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesignhe) இன்று அதில் வெற்றி கண்டுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டை பொறுப்பேற்ற ரணில்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் 42 வருட நீண்ட அரசியல் அனுபவத்தின் காரணமாகவே இரண்டு வருடங்களில் வீழ்ந்திருந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்தது.
சகலரும் ஒன்றிணைந்து முன்னேறினால் மாத்திரமே இந்த நாட்டு இளைஞர்களுக்கு எதிர்காலம் உண்டு. இல்லையேல் பழைய நிலைக்கு நாடு செல்ல நேரிடும்.
பொதுவாக நாடு வீழ்ச்சியடைந்து செல்லும் போது, எதிர்கட்சிகள் நாட்டை பொறுப்பேற்க தயாராக இருக்க வேண்டும். இவ்வாறான நிலையில்தான் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதில் இன்று வரை வெற்றியும் கண்டுள்ளார்.
அவ்வாறான ஒரு தலைவர் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். எமக்கு முன்னுள்ள இன்றைய தேவை நம் நாடு தான். கடந்த உள்நாட்டுப் யுத்தத்தின் போது இது பொது மக்களுக்கு புரிய வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் என்ன சொல்கின்றன என்பது முக்கியமல்ல.
அதனால் தான் ரணில் விக்ரமசிங்க என்ற தேசிய தலைவர் சுயேச்சையாக இன்று போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை வெற்றியடையச் செய்து, நாட்டின் எதிர்காலத்தை சுபீட்சமாக மாற்றியமைக்க சகலரும் கட்சி பேதமின்றி வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
