நாளை வரை காத்திருக்கக் கூறும் மகிந்த! வெளியாகவுள்ள இறுதி முடிவு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எமது தரப்பு வேட்பாளர் தொடர்பில் திங்கட்கிழமை அறிவிப்போம். அதுவரை காத்திருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ரணிலுக்கு ஆதரவா..??
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தான் தேர்தலில் களமிறங்கப் போவதாக காலியில் வைத்து அறிவித்துள்ளார். அது நல்லது. அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கருத்துக்கள் இல்லை.

எங்களது தரப்பில் இருந்து இருந்து களமிறக்கப்படும் வேட்பாளருக்கு எங்களது ஆதரவு உண்டு. எமது கட்சியினரின் கருத்துக்களை நாங்கள் செவிமடுக்கின்றோம்.
கட்சியினரின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தே வேட்பாளர் தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
ஒருவேளை ரணிலுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கட்சியினரின் முடிவு அமைந்தால் அதனையும் பரிசீலிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan