ரணிலுக்கு ஆதரவு வழங்கத் தயாராகும் சுதந்திரக் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வேட்பாளராக நிறுத்தப்பட்டால், அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்தார்.
இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை
ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாகவும், கிராம மட்டத்திலிருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் துமிந்த திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
