ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி : ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது - நவீன்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்முனைப் போட்டி நிலவும் எனவும், அதில் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) வெற்றி பெறுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க(Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.
மும்முனை போட்டி
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) மற்றும் அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) ஆகியோர் அறிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவும் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவார். இவர்கள் மூவருமே பிரதான வேட்பாளர்கள், இவ்வாறு ஜனாதிபதி தேர்தலின்போது மும்முனைப் போட்டி நிலவும் என்பதால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறும்.
இதுவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு வெற்றி வாய்ப்பாக அமையும். எனவே, ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |