பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில்
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக ரணிலைக்(Ranil Wickremesinghe) களமிறக்குவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில்(Colombo) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணிலின் கொள்கைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக களமிறக்குவோம்.
அவரை வெற்றிபெறச் செய்ய கொழும்பு மக்கள் பாடுபடுவர் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan