ஜனாதிபதி தேர்தலில் நாமல் : கால அவகாசம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) அதிக கால அவகாசம் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa)இருந்தால் நல்லதென்றும் அவர் தெரிவித்தார்.
ரணிலே பொருத்தமானவர்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டை மீட்க நாடாளுமன்றத் தேர்தலை விட ஜனாதிபதித் தேர்தலே அவசியமானது. நிலையான அரசாங்கத்தின் மூலமே நாட்டை மீட்டெடுக்க முடியும். தற்போதைக்கு நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நாட்டில் நிலையான ஆட்சி கிடைக்காது.
நாடு எதிர்கொண்டுள்ள நிலைமையில் இருந்து மீள்வதற்கு நிலையான அரசாங்கம் ஒன்றை நியமிக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தி அதனை நியமிக்க முடியும்.
ஜனாதிபதி கோட்டாபய காலத்தில் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஸ்திரப்படுத்தியுள்ளார்.
எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியில் முன்னிறுத்துவதற்கு பொருத்தமான வேட்பாளர் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |