தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
நாடாளவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வரும் நிலையில், சமகால ஜனாதிபதியும் வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை இன்று பதிவு செய்தார்.
இதன்போது இந்திய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மிகவும் யதார்த்தமாக பதிலளித்தமை குறித்து அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
நடைபெறும் தேர்தலில் உங்கள் நம்பிக்கை என்ன? என ஜனாதிபதியடம் வினவிய போது எனது நம்பிக்கை இலங்கை மீதுதான் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் நிலை
இலங்கையை அபிவிருத்தி செய்வோம். அதனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய இலங்கையும் புதிய பாதுகாவலரையுமே மக்கள் கேட்கின்றனர் என ஊடவியலாளர் வினவிய போது, பழைய பாதுகாவலர்கள் ஓடிவிட்டார்கள் என ரணில் குறிப்பிட்டுள்ளார்.
நாடு வங்குரோத்து அடைந்த நிலையில், அதனை மீட்டு வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வழி செய்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என பலதரப்பும் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பளரான சமகால ஜனாதிபதியின் யதார்த்தமான பேச்சு பல தகவல்களை வெளிப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri