ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு - சந்திரிக்கா அம்மையார் வெளியிட்ட தகவல்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்தனகல்ல தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட கலந்துரையாடல் நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி தேர்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களை அழைத்து சந்திரிகா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த சந்திரிகா, தான் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபனை இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துத் தெரிவித்த சந்திரிக்கா தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர் என்றும் தெரிவித்துள்ளார்.
You may like this,

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

sambar podi: ஐயங்கார் வீட்டு சாம்பார் பொடி நாவூறும் சுவையில் செய்வது எப்படி? காரசாரமான ரெசிபி Manithan
