பயங்கரவாத தடைச்சட்ட மீளாய்வு குழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கவுள்ள ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த வார இறுதிக்குள், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவிற்கான உறுப்பினர்களை நியமிக்கவுள்ளார்.
முன்னதாக, பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வு செய்வதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை அனுமதிப்பத்திரம் கடந்த அமைச்சரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவிவகாரர்களுக்கான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் கூட்டாக இந்த அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பித்திருந்தனர்.
இதேவேளை, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், 46ஆவது கூட்டத்தொடரின் இலங்கை பற்றிய தீர்மானத்திலும் வலியுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
