ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து!
2022 ஆசிய வலைப்பந்து சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வலைப்பந்தாட்ட அணித் தலைவர் உள்ளிட்ட அணியின் ஏனைய வீரர்களின் ஒற்றுமை மற்றும் மகத்தான அர்ப்பணிப்பினால், சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை அணிக்கு இந்த சிறந்த வெற்றியைப் பெற முடிந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செய்தி
சர்வதேச விளையாட்டு ரசிகர்கள் உள்ளிட்ட விளையாட்டை விரும்பும் அனைவரது கவனத்தையும் இலங்கையின் பக்கம் ஈர்த்த இந்த வெற்றி, இலங்கை அணி வீர, வீராங்கனைகளுக்கு மட்டுமன்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் உத்வேகமாக அமையும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை வலைப்பந்தாட்ட அணி மேலும் வெற்றிகளை பெறவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
