ரம்புக்கனையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்: ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள அறிவிப்பு (Photo)
ரம்புக்கனை பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும்,
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது.
ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வர், இந்த துயரச் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
Sri Lankan citizens' right to peacefully protest wont be hindered. @SL_PoliceMedia will carry out an impartial & transparent inquiry re the incident at Rambukkana which led to the tragedy for which I’m deeply saddened. I urge all citizens to refrain from violence as they protest.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) April 20, 2022



