ஜனாதிபதி தேர்தலில் நாமல் பெறவுள்ள மொத்த வாக்குகள்! வெளிவராத கணிப்பு
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியிருக்கும் மொட்டுக் கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச பெறும் வாக்குகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்கு என்னால் கணிக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நாமல் வெற்றிபெற மாட்டார்...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதால் அரசியல் ரீதியாக எவ்விதமான தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது. தோல்வியை ஏற்றுக்கொள்ளப் போகும் நாமல் ராஜபக்சவுக்கு தீர்க்கமான செல்வாக்கு இருக்கும் என்று நினைக்க முடியாது. வெற்றி பெற முடியாது என்று நினைத்தவுடன், ஏராளமான வாக்காளர்கள் வெளியேறி விடுகின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் நாமல் ராஜபக்ச பெறும் வாக்குகளின் எண்ணிக்கை என்னவாக இருக்கும் என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடியும். ஆனால் நெறிமுறை காரணங்களுக்காக நான் வாக்குகளின் எண்ணிக்கையைக் கூற மாட்டேன்.

ஆனால் அவர் தோல்வியுற்றவர், வெற்றி பெற அவருக்கு குறைவான வாய்ப்புக்களே உள்ளன. நாமல் எவ்வித வாக்குகளையும் பெறமாட்டார் எனக் கூறவில்லை, அவர் சில வாக்குகளைப் பெறலாம் ஆனால் அது ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அருகில் இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 20 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam