மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள்: மக்களைத் திசை திருப்பும் தந்திரோபாயம் என்றும் ஜீவன் ஆவேசம்
அநுர அரசால் இன்று வழங்கப்பட்ட வீட்டு ஆவணப் பத்திரங்கள் வெறும் காகிதத் தாள்களை வழங்கும் ஒரு விளம்பர நிகழ்ச்சி மாத்திரமே என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவருடைய சமூக ஊடகப் பதிவின் மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காகிதத் தாள்களே கையளிப்பு
அந்தப் பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
President @anuradisanayake will not be handing over any houses on the 12th. He will only give families a paper naming them as future beneficiaries, a document with no legal weight.
— Jeevan Thondaman (@JeevanThondaman) October 11, 2025
This has been standard practice since the start of the program but it is the first time an event… https://t.co/2pYlQYBdi9
"அரசால் வழங்கப்படும் இந்த ஆவணமானது வழக்கமாக பயனாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பப்படும், மேலும் வீடுகள் ஒப்படைக்கப்படும்போது ஒரு நிகழ்வு நடத்தப்படும்.
(அவை முடிந்ததும்) இந்த நிகழ்வானது 2000 வீடுகளைக் கையளிப்பது அல்ல.
ஆனால் 2000 காகிதத் தாள்களைக் கையளிப்பதை உள்ளடக்கிய ஒரு விளம்பர நிகழ்வு மாத்திரமே. இந்தக் காகித ஆவணம் வழங்கும் நிகழ்வுக்கு எந்த தேவைப்பாடுகளும் இல்லை.
President @anuradisanayake will not be handing over any houses on the 12th. He will only give families a paper naming them as future beneficiaries, a document with no legal weight.
— Jeevan Thondaman (@JeevanThondaman) October 11, 2025
This has been standard practice since the start of the program but it is the first time an event… https://t.co/2pYlQYBdi9
கடந்த ஒரு வருடமாக மலையகத்தில் அல்லது மலையகச் சமூகத்துக்காக எந்தவொரு வேலையும் செய்யப்படவில்லை என்ற உண்மையிலிருந்து பொதுமக்களைத் திசைதிருப்புவதற்கான இது ஒரு தந்திரோபாயம் மட்டுமே.
குறிப்பாக வேதன அதிகரிப்பு இல்லை, வீடுகள் கட்டப்படவில்லை, அபிவிருத்திகள் ஏதும் இடம்பெறவில்லை." என குறிப்பிட்டுள்ளது.

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri