ஜனாதிபதி அநுர வியட்னாம் நோக்கிப் பயணம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சனிக்கிழமை மாலை வியட்னாமுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அவருடன் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள முக்கியஸ்தர்கள் சனிக்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வியட்னாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
வெசாக் கொண்டாட்டங்கள்
எதிர்வரும் ஆறாம் திகதி வரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்னாமில் தங்கியிருப்பார் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
அக்காலப் பகுதியில், வியட்னாமின் ஹோசிமின் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் கொண்டாட்டங்களின் பிரதான அதிதியாக ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் வியட்னாம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதியின் விஜயம்
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன் இலங்கையர்களுக்கு வியட்னாமில் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளும் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பங்கேற்றுள்ளனர்