தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி- மற்றொருவர் காயம்
தென்னிலங்கையில் சற்று முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இன்னொருவர் காயமடைந்துள்ளார்.
தென்னிலங்கையின் அம்பலாங்கொடை, மீட்டியாகொட பிரதேசத்தில் இன்றிரவு(3) பத்து மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

எலான் மஸ்கின் ஸ்டார்லிங்குடன் ஆரம்ப உடன்படிக்கையில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்- ஜனாதிபதி விளக்கம்
மேலதிக விசாரணை
மீட்டியாகொடை, தம்பஹிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்னுமொருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் T-56 துப்பாக்கியொன்றினால் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
