ஆறு மாத காலத்துக்குள் பொருளாதரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம்: ஜனாதிபதி அநுர
தாம் நாட்டை பொறுப்பெடுத்து ஆறு மாத காலத்துக்குள் பொருளாதரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கிண்ணியா- கிராமக்கோடு மைதானத்தில் நேற்று (12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், 400 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருந்த டொலரின் பெறுமதியை இன்று 300 ரூபாவுக்குள் மட்டுப்படுத்தியுள்ளோம்.
வாகனங்கள் இறக்குமதி
வாகனங்கள் இறக்குமதி செய்யும் போது, டொலர் உயரும் என்றார்கள். ஆனால் நாங்கள் அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.
கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, நாடுகளுக்கான கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். இதுவரை 500 பில்லியன் டொலர்களை திருப்பி கொடுத்து இருக்கிறோம்.
இன்று வாகனங்களுக்காக LC, 300 மில்லியன் ரூபாய்களுக்கு அதிகமாக திறக்கப்பட்டிருக்கிறது. புதிதாக டொலர் செலவழிக்கப்பட்டு இருக்கின்றது என்பதுதான் இதனுடைய அர்த்தமாகும்.
இன்னும் ஐந்து வருடங்களின் பின்னர், ஆறு பில்லியனுக்கும் அதிகமான டொலர்களை கையிருப்பில் வைத்திருப்பதே எமது இலக்கு. எனவே, தற்போது பொருளாதார உறுதியான நிலையில் இருக்கின்றது. எவரும் அஞ்ச வேண்டியதும் இல்லை.
பொருளாதாரம்
இனவாதத்தை கூறி, நாட்டு மக்களை குழப்ப வேண்டியதும் இல்லை. அவர்களிடமிருந்து நாட்டை பொறுப்பெடுக்கும் போது, 30 வீதத்துக்கும் மேல் சென்ற வட்டி வீதம், இன்று 10% ஆக குறைந்து இருக்கின்றது.
எனவே நாடு உறுதியாக இருக்கின்றது. எவரும் அஞ்ச வேண்டியதில்லை. இனவாதத்தை கூறி, நாட்டு மக்களை குழப்ப வேண்டியதும் இல்லை.
இன்று எரிபொருளின் விலை குறைந்திருக்கிறது. மின்சார பட்டியலும் குறைந்து இருக்கிறது. பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டின் நன்மைகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றது.
இலங்கை வரலாற்றில் ஆறு மாத காலத்துக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகமாக அதிகரித்த ஒரு அரசாங்கம் என்றால் அது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
