புத்தாண்டு காலத்தில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்
புத்தாண்டு காலத்தில் ஏற்படும் விபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், பட்டாசுக்களை வெடிக்கும் போது தீக்காயங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதேவேளை, புத்தாண்டு காலங்களில் சிறுவர்கள் விபத்துக்கு உள்ளாவதை தவிர்ப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் சிறுவர்கள் தீவிபத்து, மின்சார தாக்குதலுக்கு உள்ளாகுகின்றமை, நீராடச்சென்று நீரில் மூழ்குகின்றமை போன்ற அனர்த்தங்கள் பதிவாகின்றன.
எனவே இது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மது போதையில் பிள்ளைகளுடன் பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறும் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
