நாடு திரும்பிய அநுர
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01.10.2025) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுர செப்டெம்பர் 22ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர், ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அநுர குமார செப்டெம்பர் 27 ஆம் திகதி காலை ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.
UL-403 விமானம் ஊடாக
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சென்றிருந்தனர்.

அதன்படி, விஜயத்தை முடித்துக்கொண்டு, அவர்கள் அனைவரும் இன்று காலை 09.30 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-403 விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 17 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan