இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர : இந்திய - இலங்கை உறவில் சிக்கல்
இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜே.வி.பியினுடைய 50 வருட வரலாற்றுக்கனவு.
இந்தநிலையில், அநுர குமார நாட்டில் இடம்பெற்ற ஊழலை ஒழிப்பதற்கு மட்டுமல்ல பொருளாதாரத்தில் ஒரு ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் முயற்சிக்க வேண்டும்.
எனினும், ஜே.வி.பியினுடைய வரலாற்றை பொறுத்தவரை இலங்கையினுடைய தேசபக்தி, இலங்கையினுடைய தனிப்பட்ட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இவர்கள் எந்த நாடுகளினுடைய ஆதரவும் இல்லாதவர்களாக இருந்தாலும் கூட சீனாவோடு நெருங்கிப் பயணிக்கக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இந்தியா - இலங்கை உறவில் சிக்கல் தன்மையும் ஏற்படலாம். ஆனாலும் இந்த தேர்தலின் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவொரு விடிவும் வராது என மூத்த பத்திரிகையாளர் உமாபதி ஐ.பி.சி தொலைக்காட்சியின் நேர்காணலின் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |