இலங்கையின் பல வருட வரலாற்றை மாற்றியமைக்கும் ஜனாதிபதி அநுர
கடந்த ஆண்டுகளை போன்று, இந்தாண்டு ஜனாதிபதியின் புத்தாண்டு சடங்கு நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
தான் எவ்வாறு புத்தாண்டு கொண்டாடுகிறேன் என்பதனை படம் போட்டு காண்பிப்பதில் எவ்வித பிரயோஜனமும் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சடங்குகளை சரியான முறையில் செய்வதே கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடி ஒளிபரப்பு
தொலைகாட்சி நிறுவனங்களை அழைத்து வந்து, அதனை நேரடியாக ஒளிபரப்பி பொது மக்களின் பணத்தை வீணடித்து, நான் பால் பொங்க வைப்பதனையும், பாற்சோறு சாப்பிடுவதனையும் மற்றவர்களுடன் மகிழ்ச்சியடைவதனையும் தொலைகாட்சியில் காண்பிப்பதில் எந்த பயனும் இல்லை.
சாதாரண மக்கள் போன்று தான் எனது கொண்டாட்டமு் இருக்கும். அதனை தொலைக்காட்சி வாயிலாக வெளிக்காட்ட வேண்டிய அவசியம் இல்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதி புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் நேடி ஒளிபரப்புகளில் அல்லது காணொளிகளில் பார்க்க முடியாது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.