ஜனாதிபதியின் மட்டக்களப்பு மாவட்ட விஜயத்தை முன்னிட்டு இடம்பெற்ற தேசிய செயற்றிட்ட நிகழ்வு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் “முழு நாடும் ஒன்றாக" எனும் தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜாவின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு மற்றும் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப.தினேஸின் இணைப்பாக்கத்தில் காந்தி பூங்காவில் இன்றி திங்கட்கிழமை (18.05.2026) இடம்பெற்றது.
இத்தேசிய செயற்றிட்டத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள 57 பொலிஸ் நிலையங்களிலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்கள் மற்றும் பதாகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.





மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri