திடீரென வந்திறங்கிய ஜனாதிபதி - பாதுகாப்பையும் மீறி சூழ்ந்து கொண்ட தொழிலாளர்கள்
நானுஓயா - ரதல்ல பகுதியில் அங்கிருந்த தோட்டத் தொழிலாளர்களை திடீரென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (11.02.2026) காலை பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி திடீரென அவ்விடத்திற்கு வந்ததை அவதானித்த அப்பகுதி தொழிலாளர்கள், அவருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
நன்றி தெரிவிப்பு
அத்துடன் ஜனாதிபதியை சூழ்ந்து கொண்ட தோட்ட தொழிலாளர்கள், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், எங்களைப் பார்ப்பதற்கு வந்த ஒரேயொரு ஜனாதிபதி நீங்கள் தான். எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி நீங்களே எனவும் கூறியுள்ளனர்.














மேலதிக தகவல் - செ.திவாகரன்
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam