69 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் நடைபெறும் மாநாடு! ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி
இந்த வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய மாநாட்டின் 37 ஆவது அமர்வின் ஆரம்ப அமர்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1955 ஆம் ஆண்டில் 2 ஆவது மாநாட்டை இலங்கை நடத்தியதுடன், 69 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை இலங்கை மீண்டும் இந்த மாநாட்டை நடத்துவது விசேட அம்சமாகும்.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் 46 நாடுகளில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 34 நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமான மாநாடு இன்று(21) நிறைவடைகிறது.
தொனிப்பொருள்
இந்த மாநாடு “விவசாய உணவுக் கட்டமைப்பில் மாற்றம்” என்ற தொனிப் பொருளில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி,1935 முதல் விவசாயிகளுக்கு நிலம் வழங்கியுள்ளோம்.
இந்த காணிகள் அனைத்தும் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழான அனுமதி பத்திரத்துடன் மட்டுமே வழங்கப்பட்டன.
எனவே, இந்த நிலங்களில் விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை இருக்கவில்லை. இப்போது அவர்களுக்கு அந்த நிலங்களுக்கான முழு உரிமத்தை வழங்குகிறோம்.
அதன்படி, இந்த வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச காணி உரிமை கிடைக்கும்.
நவீன விவசாய முறைகள்
அண்மைக் காலமாக நவீன விவசாய முறைகள் குறித்து நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதற்கு 10 – 15 வருடங்கள் ஆகும்.
இருப்பினும் 10 வருடங்களில் அந்த இலக்கை அடைவதே எமது நோக்கமாகும். அதற்காக புதிய விவசாய முறைகளை நாம் நாட்டிற்குள் கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.












ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
