ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வகட்சி அரசாங்கம் மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
| சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை: அனுரகுமார |
இதன் ஓர் அங்கமாகவே குறித்த சந்திப்பும் இடம்பெறவுள்ளதாக தெரியவருகிறது.

சர்வகட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை
இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வகட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி யோசனை முன்வைப்பது சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு அல்ல. அவர் மற்றும் ராஜபக்சவினரின் தலைமையில் உருவாகும் அரசாங்கத்திற்கு ஏனைய குழுக்களின் உதவியை கோருகிறார்.
அதில் நாங்கள் எந்த வகையிலும் பங்கு கொள்ள மாட்டோம் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் நெருக்கடி நிலையால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் - அமைச்சர் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
விறகு சேகரிக்க காட்டுக்குச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : தேடிச் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி