புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை : ஜனாதிபதி கோட்டாபய வழங்கியுள்ள அறிவுறுத்தல்
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha), வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸூக்கு(G. L. Peiris) ஆலோசனை வழங்கியுள்ளார்.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை ஊக்கப்படுத்தி வருவதாகவும் அதேவேளை அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் சம்பந்தப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் சிவில் அமைப்புகளுடனும் ஈடுபாடுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த சில சந்தேக நபர்களை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது எனவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய அதனை திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை தவிர காணாமல் போனவர்கள் தொடர்பான செயலகம், இழப்பீடுகளை வழங்கும் செயலகம், தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான செயலகம் போன்றவை பிரயோசனமான பணிகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், பிரித்தானிய வெளிவிவகாரம், பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி விவகார செயலாளர் Elizabeth Truss அவர்களை வெளிவிவகாரம், பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி செயலகத்தில் சந்தித்த போதே இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri