அரசாங்க அதிகாரிகள் குறித்து குற்றச்சாட்டினை முன்வைத்துள்ள ஜனாதிபதி
பசுமை விவசாயத்திட்டத்திற்கு அரசாங்க அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
செய்தி ஆசிரியர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் ஆரம்பித்த பசுமை விவசாயத் திட்டத்திற்கு விவசாய அமைச்சின் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பசுமை விவசாயத்திற்கு விவசாயிகளின் மனநிலையை மாற்றியமைக்கும் கடமையினை அதிகாரிகள் செய்யத் தவறிவிட்டனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கைத்தொழிற்துறைகளில் ஏற்பட்ட பின்னடைவு டொலர் கையிருப்பு குறைவதற்கு ஏதுவாகியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சிக் காலத்தின் முதல் இரண்டு ஆண்டுகளும் கோவிட் பெருந்தொற்றுக்காக செலவிட நேரிட்டதாகவும், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வை... ஆடி மாதத்தில் எதிர்பாராத நிதி ஆதாயத்தினை பெறும் 5 ராசிகள் Manithan