சிறிது நேரத்தில் நீக்கப்பட்ட மகிந்தானந்தவின் பதிவு
முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தினை முகநூலில் பகிர்ந்த பின்னர் அந்தப் பதிவினை நீக்கியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி கடந்த 9ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஜனாதிபதி மாளிகை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதனை அடுத்து கோட்டாபய ராஜபக்ச 13ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து மாலைதீவிற்கு சென்ற அவர் சிங்கப்பூருக்கு நேற்று சென்றிருந்த நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தினை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.
அரசியல் பிரமுகர்களுக்கு அழுத்தம்

இவ்வாறு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதமே முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருந்தது.
பகிரப்பட்ட பதவி விலகல் கடிதமானது சிறிது நேரத்தின் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோட்டாபய பதவி விலகிய பின்னரும் நாட்டில் உள்ள அரசியல் பிரமுகர்கள்
மீது அவரது அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.