இந்தியாவிற்கு பாதுகாப்பாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள்! நிதர்சனத்தை அம்பலப்படுத்திய சிறீதரன் (Video)
விடுதலை புலிகளின் செயற்பாடு இலங்கையில் உள்ள போது இந்தியாவிற்கு பாதுகாப்பு அதிகமாக இருந்தது என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துள்ளது. ஆசியாவில் தனது பலத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது.
இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம் அதை விட வடக்கு கிழக்கிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது எனவும் கூறியுள்ளார்.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
