அதிகாரத்திற்காக வடக்கில் மீண்டும் இனவாதம்! ஜனாதிபதியின் இன்றைய உரை
யுத்தத்தை முடிவுறுத்தியதன் மூலம் இந்த நாடு முழுமையாக சுதந்திரமடையவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அதிகாரத்துக்காக வடக்கிலும் தெற்கிலும் மீண்டும் இனவாதம் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எது முழுமையான வெற்றி..
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யுத்தத்தை நிறைவு செய்துவிட்டதால் மட்டும் நாட்டில் முழுமையான வெற்றி கிட்டிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது, இந்நாட்டில் சட்டம், ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டும் போதே முழுமையான வெற்றியாக அது மாற்றமடையும்.
நாங்கள் போதுமான அளவுக்கு இரத்தம் சிந்திவிட்டோம். இந்த பூமித்தாய் நனைந்து ஈரம் கசியும் வரை இரத்தம் சிந்தியுள்ளோம். குருதி ஆறாக ஓடுமளவுக்கு இரத்தம் சிந்தியுள்ளோம். தாய், தகப்பன் சிந்திய கண்ணீர் கங்கையாக பெருக்கெடுத்து ஓடுமளவுக்கு கண்ணீர் சிந்தியவர்கள் நாங்கள்.
போரின் கொடிய வேதனைகளுக்கும், கொடும் வேதனைகளின் அனுபவங்களையும் எதிர்கொண்டவர்கள் நாங்கள். அவற்றை அனுபவமாகக் கொள்வதாயின் அவ்வாறான ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
நாங்கள் முழுமையான வெற்றியாளர்கள் கிடையாது. இந்நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டினால் மட்டுமே முழுமையான வெற்றியாளர்களாக மாற முடியும். அதன் காரணமாக கர்ஜனைகளுக்கு அஞ்சாமல் சமாதானத்துக்காக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மீண்டுமொரு யுத்தத்தின் அச்சம் ஏற்படாத சமூகமொன்றை நாம் உருவாக்க வேண்டும். அது மிகவும் கடினமான விடயம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எந்த வழியிலேனும் அந்த இலக்கை அடைந்து கொள்ள வேண்டும்.
அதிகாரத்துக்காக வடக்கிலும் தெற்கிலும் மீண்டும் இனவாதம் தூண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வந்ததன் காரணமாக நாம் தாய்நாட்டின் உண்மையான சுதந்திரத்தை அடைந்து கொள்ளவில்லை. தாய்நாட்டின் முழுமையான சுதந்திரம் என்றால் என்ன?
இன்றைக்கும் இந்த மழைத்துளிகள் விழும் போது நமக்குள் ஒரு அச்சம் வருகின்றது, மண்சரிவு அபாய வலயத்துக்குள் 4900 வீடுகள் உள்ளன. அந்த வலயங்களில் எந்த இடத்திலாவது மண்சரிவு ஏற்படுமோ என்ற அச்சம் நமக்குள் உள்ளது. அப்படியெனில் நாங்கள் சுதந்திரமானவர்களா?
இன்றைக்கும் உலகில் எங்காவது ஓரிடத்தில் மோதல் ஏற்படும் போது நம் நாட்டின் பொருளாதாரத்தில் அது எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நமக்குள் எழுகின்றது. நாம் சுதந்திரமானவர்களா? பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைந்த ஒரு நாடு என்ற வகையில் நாம் எப்படி சுதந்திரமானவர்களாக முடியும்? நமக்கு இறையாண்மை எங்கே உள்ளது? இன்றைக்கு நாம் பொருளாதார ரீதியாக இறையாண்மையை இழந்த நாடு என்பதே உண்மை.
நாம், நம் நாட்டின் பொருளாதாரம் குறித்த முடிவுகளை நாமே தீர்மானிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். எனவே நம் தாய்நாட்டை உலகின் முன்பாக பெருமை மிகு தேசமாக மாற்றியமைப்பதாயின் பொருளாதார மாற்றமொன்றை நாம் அடைந்து கொள்ள வேண்டும்.
எந்தளவு சிரமமான விடயமாக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சியை இந்நாட்டில் நிலைநிறுத்த வேண்டும். இந்நாட்டின் அரச நிர்வாகம் குறித்து உலகம் பாராட்டும் நிலை ஏற்பட வேண்டும்.
இந்நாட்டில் குற்றச் செயல்கள், போதைமருந்துகள் அற்ற தேசமாக மாற்றம் பெற வேண்டும். மோதல்கள் அற்ற பகைமையுணர்வுகள் அற்ற தேசமொன்றை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும்.
அப்போதுதான் நாங்கள் முழுமையான சுதந்திரம் பெற்றவர்களாக மாறுவோம். தாய்நாடும் பலமான இறையாண்மை கொண்ட தேசமாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.











பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
