கோட்டாபயவிற்கு எதிராக தயாராகும் மனு!(Video)

Vavuniya Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Shan Aug 21, 2022 01:07 AM GMT
Report

ஜெனிவாவில் இடம்பெறும் மனித உரிமை பேரவையில் கோட்டாபயவிற்கு எதிராக மனுவொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவில், எம்மை இனப்படுகொலைக்குள்ளாக்கிய கோட்டாபயவையும் அதனுடன் தொடர்புடையவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் முன்வைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று(20) வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் கட்சித்தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அழைக்கப்பட்டு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தன் நடராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.


கோரிக்கைகள்

கோட்டாபயவிற்கு எதிராக தயாராகும் மனு!(Video) | Prepared Petition Against Gotabaya

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ஜெனீவா கூட்ட தொடருக்கு முன்பாக அனைவரினதும் ஏகோபித்த கருத்தாக ஜெனீவா கூட்டு நாடுகளுக்கு அனுப்புவதற்கு மனுவில் கையொப்பமிட்டு அனுப்புவதற்காக இந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியிருந்தோம்.

கடந்த வருடம் ஜனவரி 15ஆம் திகதி அனைவரும் ஒற்றுமையாக ஒரு குரலில் கோரிக்கைகளை முன்வைத்தது போன்று இந்த தடவையும் இதை செய்வதற்கு நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கின்றோம்.

கட்சிகளின் நிலைப்பாடு

கோட்டாபயவிற்கு எதிராக தயாராகும் மனு!(Video) | Prepared Petition Against Gotabaya

இதற்கு ஆதரவாக தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. நாங்கள் எழுதிய மனுவிற்கு ஆதரவாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஏனைய கட்சிகளும் வெளிப்படையாக கூறாவிட்டாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதாக தான் வந்த பிரதிநிதிகள் கூறியிருக்கின்றார்கள். அதை தமது தலைமை பீடங்களுடன் கதைத்து தான் தமது இறுதி முடிவை அறிவிப்பார்கள்.

தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவோ, ஏதோ மிகுதி விடயத்தை கொண்டு சென்று, நாளை நமக்கு கால அவகாசம் போதாமல் இருப்பதால், நாங்கள் இன்றோ, நாளையோ, அவர்களுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டாவது அவர்களின் அனுமதியை மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைபேசி மூலமாகவோ, தொலைபேசியில் குறும் செய்தி மூலமாகவோ அதனை பெற்று நாங்கள் கூடிய விரைவில் அதை அனுப்பி வைப்போம். ஏனென்றால் காலம் போதியதாக இல்லை.

கோட்டாபயவிற்கு எதிராக தயாராகும் மனு!(Video) | Prepared Petition Against Gotabaya

இந்த அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து அந்த மனுவை அனுப்புவதாக உள்ளோம். அதைவிட இன்னொரு மனுவையும் தயார் செய்து வைத்துள்ளோம்.

அது சமூக அமைப்புகளும், பாதிக்கப்பட்ட தரப்பினருமாக சேர்ந்து அனுப்புவதற்காக அதிலே நாங்கள் அரசியல் தீர்வு தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு, கையகப்படுத்தப்பட்ட நிலம், அரசியல் கைதிகளின் விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலம், விகாரைகளை அகற்றல் என ஆறு விடயங்களை உள்ளடக்கி இருக்கின்றோம்.”என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US